பாரிஸ்: பிரான்ஸ் தலைநகரில் நடைபெற்றுவரும் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில், ரஷ்யாவின் மெட்வதேவ் ஒற்றையர் பிரிவு சாம்பியன் பட்டத்தை வென்றார்.

பாரிஸ் நகரில் ஆண்களுக்கான மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இத்தொடரின் இறுதிப் போட்டியில், ஜெர்மன் நாட்டின் அலெக்சாண்டர் ஸ்வெரேவை சந்தித்தார் ரஷ்யாவின் மெட்வதேவ்.

முதல் செட்டை, ஜெர்மன் வீரர் அலெக்சாண்டர் 7-5 என்ற கணக்கில் கைப்பற்றினார். ஆனால், அடுத்ததாக வேகம் பெற்ற மெட்வதேவ், இரண்டாவது செட்டை 6-4 என்ற கணக்கிலும், மூன்றாவது செட்டை 6-1 என்ற கணக்கிலும் கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார்.

இப்பட்டம், இவர் பெறுகின்ற மூன்றாவது மாஸ்டர்ஸ் பட்டமாகும். ஏற்கனவே, கடந்த 2019ம் ஆண்டு சின்சினாட்டி மற்றும் 2019ம் ஆண்டில் ஷாங்காய் ஆகிய மாஸ்டர்ஸ் பட்டங்களை வென்றிருக்கிறார். ஒட்டுமொத்தமாக மொத்தம் 8 பட்டங்களை வென்றுள்ளார் இவர்.