பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா வண்ணமயமான வண்ண விளக்குகள் மற்றும் வான வேடிக்கையுடன் பிரம்மாண்டமாக தொடங்கியது.  இந்த விழா காரணமாக ஈபிஸ் டவர் உள்பட நாட்டின் முக்கிய நபரங்கள், சுற்றுலா தலங்கள், வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், அரசு அலுவலகங்கள் என முக்கிய இடங்களில் அனைத்தும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, நாடே வண்ணமயமாககாணப்படுகிறது.

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது.  கடந்த 32வது ஒலிம்பிக் போட்டி, 2021ம் ஆண்டு  ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து,    33வது ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகரான பாரீஸில்  தொடங்கி உள்ளது.

இத்ன் தொடக்க விழா நேற்று இரவு (ஜூலை 26) பிரமாண்டமாகவும்  கோலாகலமாகத் தொடங்கியது. இந்த முறை பாரிஸ் நகரில் தொடக்க விழா நடைபெறாமல், அதற்கு பதிலாக,  ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக பாரிசிஸின் மையப்பகுதியில் ஓடும் சென் நதியில்  கோலாகலமாக ஒலிம்பிக் திருவிழா தொடங்கியது. இந்த திருவிழாவை  பிரான்ஸ் நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தொடக்கி வைத்தார்.  அதிபர் இம்மானுவேல் ஒலிம்பிக் தீபத்தைக் கொப்பரையில் ஏற்றியதும் விளையாட்டுப் போட்டிகள் அதிகாரப்பூர்வ மாகத் தொடங்கியது.

சென் நதியில் தொடங்கிய இந்த பயணம் சுமார் 6 கி.மீ சென்று பான்ட் டி நதிக்கரையில் நிறைவடைந்தது. இதனை நதியின் இரு பக்கமும் நின்று லட்சக்கணக்கான ரசிகர்கள் இதனைப் பார்வையிட்டனர். பிரம்மாண்ட அணி வகுப்பு நிறைவடைந்ததும், உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் டவர் அருகே பாரம்பரிய நடனம், சிலிர்ப்பூட்டும் சாகசங்கள், வாண வேடிக்கைகள், வண்ணவிளக்குகள் என 4 மணி நேரம் நடைபெற்ற தொடக்கவிழாவின் காரணமாக பாரிஸ் நகரமே விழாக்கோலம் பூண்டது.

ஒலிம்பிக் அணிவகுப்பில் இந்திய தேசியக் கொடியை இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த சரத்கமல் ஆகியோர்   இந்திய வீரர்களுடன் மைதானத்தில் அணிவகுத்து சென்றனர்.இதனையடுத்து 85 சொகுசு படகுகளில் ஒவ்வொரு நாட்டு வீரர், வீராங்கனைகளும், தங்கள் நாட்டின் உடைய தேசியக் கொடியை ஏந்தியவாறு சென்றனர். முதல் அணியாக ஒலிம்பிக்கின் தாயகமான கிரீஸ் பயணித்தது. கடைசி அணியாகப் போட்டியை நடத்தும் பிரான்ஸ் சென்றது.

இந்தபோட்டிகள் ஜூலை 26 முதல்,  ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெறும் இதில் 206 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்து741 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

இந்தியாவை பொறுத்தவரையில் துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், தடகளம், டென்னிஸ் உள்ளிட்ட போட்டிகளில் மாற்று வீரர்கள் உட்பட 117 தொடரில் பங்கேற்று உள்ளனர். வழக்கமாகப் பிரம்மாண்டமாக அரங்கம் அல்லது மைதானம் அமைத்துத் தொடங்கவிழா நடத்தப்படும்.