** 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக, பல மாநிலங்களில் 36 இடங்களில் கடந்த மாதம் நடைபெற்ற இடைத் தேர்தல்களில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றது! மற்ற இடங்களில் திரிணாமுல், சிவசேனா, போன்ற கட்சிகளும் வெற்றி பெற்றன!
ஆனால், எதிர்பாராத விதமாக சர்வ அதிகாரமிக்க பா. ஜ. க. படுதோல்வி அடைந்தது!
ஆனால், காங்கிரசின் எழுச்சியைப் பயன்படுத்திக் கொண்டு , மோடி அரசை வீழ்த்துவதற்கு மம்தா வின் திரிணாமுல் காங்கிரஸ் விரும்பவில்லை! என்பதை, அக்கட்சியின் அண்மைக் கால நடவடிக்கைகள் காட்டுகின்றன!
ஒரே ஒரு மாநிலத்தில் மட்டுமே செல்வாக்குப் பெற்றுள்ள மம்தா பானர்ஜி, பா. ஜ. க. வை எதிர்ப்பதற்கு ப் பதில், காங்கிரசை பலவீனப்படுவதில் முனைப்பாக இருக்கிறார்!
காங்கிரசின் தேசிய மகளிர் பிரிவுத் தலைவராக இருந்தவரும் அசாமைச் சேர்ந்தவருமான சுஷ்மிதா, அண்மையில் திரிணாமுல் காங்கிரசு க்குத் தாவினார்!
உடனே அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை அளித்தார் மம்தா!
இதே போல, கோவாவிலும் பல முக்கியத் தலைவர்களை தன்னுடைய கட்சிக்கு இழுத்திருக்கிறார் மம்தா!
அதாவது, பல மாநிலங்களில் பா. ஜ. க. எப்படி காங்கிரசை உடைத்ததோ.. அதே வேலையை இப்போது மம்தா செய்கிறார்!
அதாவது… 2024 பொதுத் தேர்தலுக்கு முன்… காங்கிரசை பலவீனப்படுத்தும் முயற்சியில் மம்தா இறங்கி இருக்கிறார்!
இதனால், எதிர்க்கட்சிகள் பிளவுபடுவதைப் பார்த்து ஆளும் பா. ஜ. க. மகிழ்ச்சியில் இருக்கிறது!
என்ன செய்யப் போகிறது காங்கிரஸ் தலைமை?
** ஓவியர் இரா. பாரி.