தன்னிடம் பணிபுரிந்த உதவி இயக்குநர் தினகரன் சிவலிங்கமை இயக்குநராக அறிமுகப்படுத்தவுள்ளார் பா.இரஞ்சித்.

இவர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘கபாலி’, ‘காலா’ ஆகிய படங்களில் இணை இயக்குநராகப் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை பா.இரஞ்சித், ‘மெட்ராஸ்’ படத்தின் மூலம் நடிகராக அறியப்பட்ட போஸ்டர் நந்தகுமாரின் மகன் அருண் பாலாஜி ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

விரைவில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கும் இந்தப் படத்தில் முன்னணி நடிகர்கள் நடிக்கவுள்ளனர். தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடவுள்ளது படக்குழு.