swft4scxrpspysbqyehbhu
ரியோ
பிரேசிலில் கடந்த மாதம் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வேகமாக ஓடி வெற்றி பெற்ற வீரர்களை விட அதிக வேகமாக ஓடிசாதனை புரிந்துள்ளனர் பாராலிம்பிக் வீரர்கள்.
நடந்து முடிந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் 1,500 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற அமெரிக்க வீரர் மேத்யூ சென்ட்ரோவிஸ் ஜூனியரைவிட அதிவிரைவாக ஓடி அவரது சாதனையை முறியடித்துள்ளனர் கண்பார்வை பாதிக்கப்பட்ட நான்கு வீரர்கள்.
மேத்யூ சென்ட்ரோவிஸ்
1,500 மீட்டர் ஓட்டத்தில் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அமெரிக்க வீரர் மேத்யூ சென்ட்ரோவிஸ் ஜூனியர் அப்போட்டியை முடிக்க 3 நிமிடங்கள் 50 வினாடிகள் எடுத்துக்கொண்டார். ஆனால் பாராலிம்பிக்கில் கன்பார்வை பாதிக்கப்பட்ட அல்ஜீரிய வீரர் அல்துல் லத்தீப் பாக்கா அதே தூரத்தை 3 நிமிடங்கள் 48.29 வினாடிகளில் ஓடி உலக சாதனை படைத்துள்ளார்.
அவரையடுத்து வந்த எத்தியோப்பியாவின் தமிரு டிமிசி மூன்று நிமிடங்கள் 48.49 வினாடிகளில் ஓட்டத்தை முடித்து வெள்ளியையும். கென்யாவின் ஹென்ரி கிர்வா மூன்று நிமிடங்கள் 49.59 வினாடிகளில் ஓட்டத்தை முடித்து வெண்கலத்தையும் வென்றனர்.
baka-ap-m
நான்காவதாக ஓடி வந்த பாக்காவின் சகோதரர் ஃபகாட் மூன்று நிமிடங்கள் 49.84 வினாடிகளில் ஓட்டத்தை முடித்து நான்காவது இடத்தைப் பிடித்தார். இவர்கள் நால்வருமே ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அமெரிக்க வீரர் மேத்யூ சென்ட்ரோவிஸ் ஜூனியர் அதிக வேகத்தில் ஓடி பந்தயத்தை முடித்தவர்கள்.
தங்கத்தை வென்ற பாக்கா இது எனக்கு எளிதாகக் கிடைத்த வெற்றியல்ல, இதற்காக இரு வருடங்களாக ஓய்வின்றி உழைத்தேன் என தெரிவித்துள்ளார்.