சென்னை: சென்னை பெரம்பூர் பகுதியில் வசித்து வந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம கும்பலால் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதன் காரணமாக பெரம்பூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்து வருபவர் ஆம்ஸ்ட்ராங். இவர் வழக்கறிஞராகவும் உள்ளார். இவரை இன்று மாலை மர்ம நபர்கள் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி உள்ளது. இந்த சம்பவம், அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவத்துக்கு விரைந்து வந்த செம்பியம் காவல்துறையினர் ஆம்ஸ்ட்ராங்கை மீட்டு கிரீம்ஸ் சாலையிலுள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதித்தனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையில், ஆம்ஸ்ட்ராங் பெரம்பூரில் வீட்டின் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருக்கும்போது அவரை பின் தொடர்ந்த, 6 பேர் கொண்ட மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு உடனடியாக சம்பவ இடத்திலிருந்து தப்பிவிட்டது. , தப்பியோடிய ஆறு பேரைக் கண்டுபிடிக்க போலீஸார் தனிப்படை அமைத்து தேடிவருகின்றனர்.
அதே சமயம், தொழில் போட்டி அல்லது முன்விரோதம் காரணமாக ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. வழக்கறிஞரான ஆம்ஸ்ட்ராங், வடசென்னையின் பிரபல ரவுடிகளில் ஒருவர். இவர் கட்டப்பஞ்சாயத்து, கஞ்சா உள்பட போதை பொருள்கள் விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் எற்பட்ட தொழில் போட்டி காரணமாகவே அவர் வெட்டி கொலை செய்யப்பட்டு இருப்பதாக அப்பகுதி மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.
ஆம்ஸ்ட்ராங் ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், கடந்த அதிமுக ஆட்சியின்போது, மறைந்த ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, அவரை என்கவுண்டர் செய்ய சொன்னதாக தகவல்கள் பரவியது. இதையடுத்து ஆம்ஸ்ட்ராங் வெளி மாநிலத்துக்கு தப்பிச்சென்று தலைமறைவாக இருந்து வந்ததார்- அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று ஆம்ஸ்ட்ராங்கை மர்ம கும்பல் அரிவாளால் வெட்டி சாய்த்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக அவர் வசித்து வந்த பகுதியில்ல் கடைகள் அடைக்கப்பட்டு உள்ளது. அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சமீப காலமாக சென்னையில் போதைபொருள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. கால்வாய் ஓரங்களிலும் பள்ளி கல்லூரி பகுதிகளிலும் போதை பொருட்கள் தாராளமான விற்பனை செய்யப்படுகிறது. அதுபோல தடை செய்யப்பட்ட பான் பாராக் போன்ற புகைப் பொருட்களும் அனைத்து கடைகளிலும் விற்பனை செய்யப்படுகிறது. இதை தடுக்க வேண்டிய காவல்துறையினர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றனர். மேலும் போதை பொருட்கள் விற்பனை செய்வதில் அவ்வப்போது, அவர்களுக்குள்ளேயே ஏரியா தகராறுகளும், அதன் காரணமாக படுகொலைகளும் அரங்கேறி வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, இன்று உச்சபட்சமாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் மாலை 6.30 மணி அளவில் அவரது வீடு அருகே, மர்ம கும்பலால் வெட்டி சாய்க்கப்பட்டு உள்ளார்.