
31 பேர் கொண்ட குழுவில், அதுவும் பெண்களின் திருமண வயது குறித்து ஆய்வு செய்யும் குழுவில் பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படாதது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் பெண் எம்.பி.க்கள் குழுவில் இடம் பெற்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று திரிணமுல் காங்கிரசை சுஷ்மிதா தேவ் கூறினார். மேலும், மேலும் பெண்களை சேர்க்க அழுத்தம் கொடுப்போம் என்றும், என்சிபி எம்பி சுப்ரியா சுலேவும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். மேலும் பெண்கள் தொடர்பான பிரச்சினைகளில் சரியான கருத்தை தெரிவிக்கக்கூடிய அதிகமான பெண் எம்பிக்கள் குழுவில் இருக்க வேண்டும் என்று கூறினார்.
அதுபோல, இந்நிலையில் பெண்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களை ஆய்வு செய்யும் குழுவில் ஒரே ஒரு பெண் எம்பி மட்டும் இடம்பெற்றிருப்பதை சுட்டிக்காட்டும் வகையில் சிவசேனா எம்பி பிரியங்கா சதுர்வேதி, மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், நாடு முழுவதும் உள்ள பெண்களின் வாழ்வை தீர்மானிக்கப்போகும் மசோதாவை ஆய்வு செய்யும் பாராளுமன்ற நிலைக்குழுவில் 30 ஆண் எம்பிகளும், ஒரே ஒரு பெண் எம்பியும் இடம்பெற்றுள்ளனர். 21 வயதில் பெண்கள் திருமணம் செய்யலாமா என்ற பெண்களின் தலைவிதியை 30 ஆண் எம்பிகள் தீர்மானிப்பது சரியா? இதை கவனத்தில் கொண்டு மசோதாவை ஆய்வு செய்யும் பாராளுமன்ற நிலைக்குழுவில் கூடுதல் பெண் பிரதிநிதிகளை சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
இந்த நிலையில், திமுக எம்.பி. கனிமொழியும் ஆய்வுக்குழுவில் ஒரே ஒரு பெண் எம்.பி. மட்டும் நியமித்து உள்ளதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் 110 பெண் எம்.பி.க்கள் உள்ளோம்… ஆனால், பெண்ணுக்கான திருமண வயதை 21 ஆக உயர்த்தும் மசோதா ஆய்வு குழுவில் இடம்பெற்றுள்ள 31 பேரில் 30 பேர் ஆண்கள்.. பெண்களுக்கான உரிமைகளை தொடர்ந்து ஆண்களே நிர்ணயிக்கின்றனர்… பெண்கள் தொடர்ந்து ஊமையாக்கப்படுகின்றனர்.. என காட்டமாக தெரிவித்துள்ளார்.