டெல்லி: பான் கார்டை வரும் 31ம் தேதிக்குள் ஆதார் எண்ணோடு இணைக்கா விட்டால் ஏப்ரல் 1ம் தேதி முதல் பான் கார்டு செயலிழப்பு செய்யப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
வருமான வரி நிரந்தர கணக்கு எண் எனப்படும் பான் கார்டை ஆதார் எண்ணோடு இணைக்க இறுதிக்கெடு கடந்த ஆண்டு ஜூன் 30 என்று ஆக நிர்ணயிக்கப்பட்டுயிருந்தது. கொரோனா பரவல் காரணமாக காலவரம்பு நடப்பாண்டு வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், காலக்கெடுவை மேலும் நீட்டிக்க முடியாது என்றும், வரும் 31ம் தேதிக்குள் அனைவரும் பான் கார்டை, ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்றும் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் சம்பந்தப்பட்டவர்களின் பான் கார்டு, அடுத்த மாதம் 1ம் தேதி முதல் செயலிழக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் வருமான வரி சட்டத்தின் கீழ் ரூ. 10,000 அபராதம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.