சென்னை:
ட்டமன்றத்தில் விதி 110ன் கீழ் அறிக்கை வாசித்தே ஆட்சி நடத்துகிறார் என்று குற்றம் சாட்டுகிறார் அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏவும், இந்நாள் திமுக உறுப்பினரும் – விசுவாசியுமான பழ.கருப்பையா.
pazha-karuppaiya-angusam-3-1-250x330
நேற்று இரவு பம்மலில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய கருப்பையா,
காவிரியின் குறுக்கே கர்நாடகம் அணை கட்டும் பிரச்சினையில்  தமிழக கட்சிகளின் எதிர்ப்பை பதிவு செய்ய ஜெயலலிதா மறுப்பது சரியான செயல் அல்ல என்றார்.
மேலும் மேகதாதுவில் 6 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இரண்டு அணைகள் கட்டப்படுமென்று கர்நாடக முதல்வர் அறிவித்துள்ளதை சுட்டிக்காட்டி,  இதனைக் கண்டித்து சட்டப்பேரவையில் அனைத்துக்கட்சிகளும் சேர்ந்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும், இதுபோன்ற எதிக்கட்சிகளின் கோரிக்கையை தமிழக முதல்வர் ஏற்பது இல்லை, அவர் தன்னிச்சையாக செயல்படுகிறார் என்றும் கூறினார்.
மேலும், சட்டப்பேரவையில் தினமும் விதிஎன் 110ன் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்து, அது குறித்து யாரும் கருத்து தெரிவிக்காதவாறு தற்பெருமை பேசி ஆட்சி செய்வதாக ஜெயலலிதாவை குற்றம் சாட்டி பேசினார்.