பிரபல ஹாலிவுட் நடிகை பமீலா ஆண்டர்சன் தன் பாதுகாவலரான டேன் ஹேஹர்ஸ்டை கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது திருமணம் செய்து கொண்டார். பமீலாவின் வீட்டு தோட்டத்தில் தான் எளிமையான முறையில் திருமணம் நடந்திருக்கிறது.
திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது. லாக்டவுன் நேரத்தில் தான் பமீலாவுக்கும், டேனுக்கும் இடையே காதல் ஏற்பட்டதாம். இது பமீலாவின் 5வது திருமணம் ஆகும்.
நேற்று பமீலா ஆண்டர்சன் சமூக வலைதளத்திற்கு குட்பை சொன்னார். தன் கடைசி இன்ஸ்டாகிராம் போஸ்ட்டில் பமீலா கூறியதாவது,
“இன்ஸ்டாகிராம், ட்விட்டர், ஃபேஸ்புக்கில் இதுதான் எனது கடைசிப் பதிவு. எனக்கு என்றுமே சமூக ஊடகங்களில் ஆர்வம் இருந்ததில்லை. இப்போது நான் வாழ்க்கையில் சீரான நிலையில் உள்ளேன். புத்தக வாசிப்பு, இயற்கையுடன் நேரம் செலவிடுவது எனக்கு உண்மையில் உந்துதலைத் தருகிறது. நான் சுதந்திரமாக இருப்பதாக உணர்கிறேன். உங்கள் அன்புக்கு நன்றி. உங்கள் அனைவருக்கும் ஆசிகள்.
வாழ்க்கையில் உங்களுக்கான நோக்கத்தை நீங்கள் தேடுவீர்கள் என்றும், அதற்கான வலிமை, உந்துதல் உங்களுக்குக் கிடைக்கும் என்றும் நான் நம்புகிறேன். நேரத்தை வீணடிக்கும் வேலைகளில் மயங்கி விடாதீர்கள். அதுதான் அவர்களுக்குத் தேவை. உங்கள் மூளையைக் கட்டுப்படுத்தி அதை வைத்து அவர்களால் சம்பாதிக்க முடியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
53 வயதான பமீலா ஆண்டர்சனை இன்ஸ்டாகிராமில் 12 லட்சம் பேரும், ட்விட்டரில் 10 லட்சம் பேரும் பின்தொடர்கின்றனர். அவரது அறக்கட்டளைக்கான ஃபேஸ்புக் பக்கத்தில் கிட்டத்தட்ட 9 லட்சம் பேர் இணைந்துள்ளனர்.