சென்னை: நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பாலம் தரமாக உள்ளது என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.
பாலத்தில் விரிசல் என தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சம்பந்தப்பட்ட பாலத்தின் உறுதித்தன்மை அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் உமா ஆய்வு செய்தார். இதையடுத்து பாலம் தரமாக இருப்பதாக தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் நகரில் அமைக்கப்பட்டுள்ள பாலம், திறக்கப்பட்ட நாளே விரிசல் விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரூ.320 கோடி திட்டத்தின் பாலம்: நடந்த ஊழல் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன் உள்பட அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரும் நேரில் வந்து பாலத்தின் விரிசலை ஆய்வு செய்தார்.
இந்த நிலையில், ராசிபுரம்-திருச்செங்கோடு சாலையில் பள்ளிபாளையத்தில் ப திதாக திறக்கப்பட்ட பாலம் தரமாக உள்ளது பாலத்தின் தரம் குறித்து சில சமூக விரோதிகளால் தவறான செய்திகள் பரப்பப்படுகின்றன. பள்ளிபாளையம் பாலம் தரமாகவே உள்ளது ஒப்பந்ததாரரால் 7 ஆண்டுகளுக்கு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் நகரில் நெரிசலை குறைத்திடும் வகையில் 3.40 கி.மீ தொலைவுக்கு கட்டப்பட்டுள்ள பாலத்தின் பல இடங்களில் விரிசல்கள் ஏற்பட்டிருப்பதாகவும், சுற்றுச்சுவரின் கற்கள் பெயர்ந்து விழுவதாகவும் புகார் எழுந்தது. ரூ.320 கோடியில் கட்டப்பட்டுள்ள அந்த மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே 29ந்தேதி காலை தான் திறந்து வைத்த நிலையில், அதற்கு முன்பாகவே பாலம் சேதமடைந்திருப்பது கட்டுமானப் பணிகளின் தரமற்றத் தன்மையைத் தான் காட்டுவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியிருந்தார். மேலும் உயர்மட்ட மேம்பாலத்தின் தரத்தை முழுமையாக பரிசோதிக்கும் முன்பு அவசரகதியில் திறக்க வேண்டிய அவசியம் என்ன? என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் கேள்வி எழுப்பி இருந்தார்.