நெல்லை: திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சமாதானபுரம் அருகே பல ஆண்டுகள் பெருமை வாய்ந்த பள்ளிகளில் ஒன்றான தூய யோவான் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்ட வந்த 2 ஆசிரியர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள்மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என பெற்றோரிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில், போதைபொருட்கள் நடமாட்டம் ஒருபுறம் மக்களை அச்சத்துக்கு உள்ளாக்கி வரும் நிலையில், சமீப காலமாக பாலியல் சீண்டல்களும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பள்ளிகளில் மாணவிகளுக்கு ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினரே பாலியல் சேட்டைகளில் ஈடுபட்டு வரும் அவலம் காணப்படுகிறது. இதுதொடர்பாக மாணவிகள் புகார்கள் கொடுத்தாலும் பல பள்ளிகளில் நடவடிக்கை எடுக்காமல், புகார் கொடுக்கும் மாணவிகளே பாதிப்புக்கு உள்ளாகும் நிலை உள்ளது. அதை மீறி புகார் கொடுத்தால், சில பகுதிகளில் மட்டுமே காவல்துறையினர் பள்ளி ஆசிரியர்கள் மீது போக்சோவில் வழக்கு பதிவு செய்து செய்கின்றனர். ஆனால், பல தனியார் பள்ளிகளில் நடைபெறும் பாலியல் சீண்டல் தொடர்பான வழக்குகளை பதிவு செய்யக்கூட காவல்துறையினர் மறுத்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஆயிரக்கணக்கான மாணாக்கர்கள் கல்வி பயின்று வரும் பழமையான பாளையங்ககோட்டை தூய யோவான் மேல்நிலைப்பள்ளியில் வேலை பார்த்து வரும் இரண்டு ஆசிரியர்கள் ஏழாம் வகுப்பு மாணவர்கள் இருவரை மிரட்டி பாலியல் ரீதியிலான சீண்டல்கள் கொடுத்ததாக தெரிகிறது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் வீட்டிற்கு சென்று பெற்றோர்களிடம் தெரிவித்து உள்ளனர், அதன்படி பெற்றோர் பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியரிடம் இது குறித்து முறையிட்டுள்ளனர். ஆனால் தலைமையாசிரியர் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்ததோடு சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை அழைத்து எச்சரிக்கை விடுத்ததோடு அவர்களை சில நாட்கள் விடுப்பில் செல்லுமாறு அறிவுறுத்தியதாகவும் தெரிகிறது.
பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத நிலையில், மாணவிகளின் பெற்றோர் தங்களுக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி புலம்பிய நிலையில், இந்த தகவல்கள் அந்த பகுதியில் வைரலானது. இதையடுத்து, காவல்துறையினர், பள்ளிக்கல்வித்துறையினர் பள்ளிக்கு வந்த விசாரணை மேற்கொண்டனர். மேலம் பாதிக்கப்பட்ட மாணவிகளையும் விசாரணை செய்தனர். இதில் ஆசிரியர்கள் பாலியல் சேட்டையில் ஈடுபட்டது உறுதியானது.
இதையடுத்து, அங்கு பணியாற்றி வந்த தற்காலிக ஆசிரியர் ராபர்ட் என்பவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். மேலும் ஆசிரியர் ராபர்ட் என்பவருக்கு துணை போனதாக மற்றொரு நிரந்தர ஆசிரியர் நெல்சன் என்பவரை பணியிடை நீக்கம் செய்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஆனால், அவர்கள்மீது போக்சோ வழக்கில் வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்றும், அவர்கள் கைது செய்யப்படவில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
பழமையான இந்த பள்ளியில் பல ஆண்டுகளாக சாதிய முரண்பாடுகள் இருந்து வருவதாகவும், சமீப காலமாக போதைபொருட்கள் நடமாட்டம் காணப்படுவதாவும் குற்றம் சாட்டும் அப்பகுதி மக்கள், ஏற்கனவே பலமுறை மோதல் சம்பவங்களும் நடைபெற்றுள்ளதாக கூறுகின்றனர். ஒருசி ஆசிரியர்களே மாணவர்களுக்கு ஒழுக்கக்கேடான விசயங்களை சொல்லி கொடுப்பதும் அவர்களை மிரட்டி காரியங்களை சாதிப்பதும் தொடர்கதையாக இருப்பதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சிவக்குமார், தூய யோவான் பள்ளிமீது புகார்கள் வந்துள்ளதாகவும் இதன் அடிப்படையில் தற்போது போலீசார் மற்றும் கல்வித்துறை ஆகியவை நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும் எந்தவொரு தகவலையும் தெரிவிக்க மறுத்து விட்டார்.
மாவட்ட காவல்துறையும், கல்வித்துறை அதிகாரிகளும் தனியார் பள்ளிக்கு ஆதரவாக ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்வதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
கிருஷ்ணகிரி தனியார் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் கொடுமை: அரசு பள்ளியின் என்சிசி ஆசிரியர் கைது…