பழனி:
கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த பிரபலமான பழனி கோவிலில் மொட்டை போடும் தொழிலாளர்கள் தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றம் மதுரையில் வழக்கு தொடுத்துள்ளனர்.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கோவில்களும் மூடப்பட்டுள்ளதால், அதை நம்பி தொழில்செய்து வரும் வியாபாரிகள், பக்தர்களுக்கு மொட்டை போடும் தொழிலா ளர்கள், பூஜாரிகள் உள்பட அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுஉள்ளனர்.
இந்த நிலையில், பழனி தண்டாயுதபாணி கோவிலில் மொட்டை அடிக்கும் தொழிலாளர்கள், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், நிவாரணம் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். அதில், தங்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.600 நிவாரணம் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும், பெரிய கோவில்கள் திறக்கப்படாததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வருவாய்த்துறை, இந்து சமய அறநிலையத்துறை பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.