பழனி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய இயக்குனர் மோகன் ஜி-யை ஜாமீனில் விடுவிக்க திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்பட்ட லட்டுக்களில், நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பூம், மீன் எண்ணெயும் கலக்கப்பட்டு இருப்பதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து பழனி பஞ்சாமிர்தம் குறித்தும் வாட்சப்பில் வதந்தி பரவியது.
இதற்கு தமிழக அரசு சார்பில் அறநிலையத்துறை மறுப்பு தெரிவித்து விளக்கமளித்து.
இருந்தபோதும் திருப்பதி லட்டு குறித்து ஆந்திர முதல்வரே பேசிய பேச்சை திசை திருப்ப நாடு முழுவதும் தினம் தினம் ஒரு சர்ச்சையை சிறுசிறு குழுக்கள் மூலம் பரப்பப்பட்டு வருகிறது.
இயக்குனர் மோகன் ஜி தனது பங்கிற்கு பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரை கலந்திருப்பதாக கூறினார்.
ஏற்கனவே அறநிலையத்துறை விளக்கமளித்த நிலையில் இதுகுறித்து மோகன் ஜி மீண்டும் சர்ச்சையை கிளம்பியதை அடுத்து காவல்துறையினர் அவரை இன்று கைது செய்தனர்.
இந்த நிலையில், இயக்குனர் மோகன் ஜி-யை சொந்த ஜாமீனில் விடுவிக்க திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.