பழனி
தற்போது காலாவதி தேதி அச்சிடப்பட்டு பழனி கோவிலில் பஞ்வாமிர்தம் விற்பனை செய்யப்படுவதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அறுபடை வீடுகளில் ஒன்று பழனி முருகன் கோவில் ஆகும். மூன்றாவது படை வீடான இந்தக் கோவிலில் பஞ்சாமிர்த பிரசாதம் மிகவும் புகழ் வாய்ந்தது. இங்கு வரும் பக்தர்கள் முக்கியமாக வாங்கிச் செல்வது பஞ்சாமிர்தம் ஆகும். இந்தக் கோவிலில் விற்கப்படும் பஞ்சாமிர்தத்தின் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதிகள் குறிப்பிடப் படாமல் இருந்தன.
பக்தர்கள் இதற்கு ஆட்சேபம் தெரிவித்தனர். உணவுப் பொருட்கள் அனைத்துக்கும் தயாரிக்கும் தேதியும் காலாவதி தேதியும் அவசியம் குறிப்பிட வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர். அதன்படி தற்போது பழனி முருகன் கோவிலில் விற்கப்படும் பஞ்சாமிர்தத்தில் தயாரிபு தேதி குறிப்பிடப்பட்டுளது. அத்துடன் 15 நாட்கள் வரை பயன்படுத்தலாம் எனவும் அச்சிடப்பட்டுள்ளது.
கோவில் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.