பக்தர்களின்றி பழனியில் தைப்பூச திருவிழா கொடியேறியது….

Must read

திண்டுக்கல்: பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா பக்தர்கள் இன்றி கொடியேறியது. இது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பால், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள தமிழகஅரசு, கோவில்களை திறக்க தடை போட்டுள்ளது. தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் பண்டிகையான ஜனவரி 14 முதல்  ஜனவரி 18 வரை அனைத்து வழிபாட்டு தளங்களிலும் மக்களுக்கு அனுமதி இல்லை அறிவித்து உள்ளளது. அதுபோல,  தைப்பூசம் நாட்களில் கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனவும் அறிவிக்கப்பட்டது. ஆனால்,  மாடுபிடிக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதி வழங்கி உள்ளது. இது தமிழக மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், பழனி முருகன் கோயில் தைப்பூச திருவிழாவின் தொடக்க நாளான இன்று பக்தர்களின்றி கொடியேற்றம் நடைபெற்றது. பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடி ஏற்றப்பட்டது. கோவில் வரலாற்றில், இந்தமுறைதான், தைப்பூசம் திருவிழா பக்தர்கள் இன்றி இன்று தொடங்கியது இருப்பதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர். பக்தர்களை கொரோனா நெறிமுறைகளுடன் அனுமதித்திருக்கலாம் என பெரும்பாலான பக்தர்கள் தங்களது மன வருத்தங்களை கொட்டி தீர்த்தனர்.  தமிழகஅரசின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கை கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

More articles

Latest article