சென்னை; தமிழ்கடவுள் முருகன் குடிகொண்டிருக்கும் பழனி முருகன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு ஆகம விதிப்படி நடத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக பழனி முருகன் கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக திருவிழா நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். இந்த நிலையில், பழனி முருகன் கோயில் குடமுழுக்கு வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விழா ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
இதனிடையே பழனி முருகன் கோவிலில் குடமுழுக்கை தமிழில் நடத்த வேண்டும் என தமிழக அரசியல் கட்சி தலைவர்களும், பொதுமக்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், செய்தியாளர்கள சந்தித்த, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு , பழனி முருகன் கோவில் குடமுழுக்க ஆகம விதிகளுக்கு உட்பட்டு கு தமிழில் மந்திரங்கள் ஓத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
பக்தர்களின் கோரிக்கையை ஏற்று தமிழில் மந்திரங்கள் ஓத நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக கூறினார்.
கும்பாபிஷேகத்தின்போது, ஹெலிகாப்டரில் இருந்து பழனி முருகன் கோவில் மீது மலர்தூவ நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்
மேலும், பழனி முருகன் கோயிலில் இருந்து இடும்பன் கோயில் வரை ரோப்கார் திட்டம் சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும், அது குறித்து ஆய்வு செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.