மதுரை: மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கியது முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்றைய பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி, ஆட்சியர் சங்கீதா கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
காலை 9மணி வரை நடைபெற்ற போட்டியில், 2 பார்வையாளர் உள்பட 6 பேர் காயம் அடைந்துள்ளனர்.
பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று முதல்நாள் போட்டியாக மதுரை அவனியாபுரத்தில் விறுவிறுப்பான போட்டிகள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இன்று மதுரை அவனியாபுரத்தில் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறத. முன்னதாக, வாடிவாசலில், காளை மாடுபிடி வீரர்கள் உறுதி மொழி ஏற்றனர். அதைத்தொடர்ந்து அமைச்சர் மூர்த்தி கொடி அசைத்து போட்டியை தொடங்கி வைத்தார். அதையடுத்து, வாடிவாசல் வழியாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டது.
இன்றைய ஜல்லிக்கட்டில் பங்கேற்க 1000 காளைகளுக்கும், 700 வீரர்களுக்கும் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. காளைகளை அடக்கும் வீரர்களுக்கு தங்கக்காசு, பாத்திரங்கள் உள்ளிட்ட பல பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. முதல் சுற்றில் 50 வீரர்கள் பங்கேற்றனர். தொடர்ந்த 2வது சுற்று போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இன்றைய போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்களுக்கு கார் உள்ளிட்ட ஏராளமான பரிசு பொருட்களும் வழங்கப்படுகின்றன. ஜல்லிக்கட்டுப் போட்டியை ஏராளமாக மக்கள் கண்டுகளித்து வருகின்றனர்.