இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் நாட்டின் நாடாளுமன்ற சட்டகீழவையின் சபாநாயகருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானிலும் வேகமாக பரவி வருகிறது. அந்நாட்டில் 16 ஆயிரத்து 473 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு கொரோனாவுக்கு 361 பேர் உயிரிந்துள்ளனர்.

இதற்கிடையில், அந்நாட்டின் நாடாளுமன்ற சட்டகீழவையின் சபாநாயகருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்ற சட்ட கீழவையின் சபாநாயகராக செயல்பட்டு வருபவர் அசாத் குவைசர்.

இந்நிலையில், அசாத் குவைசருக்கு கொரோனா வைரஸ் பரவியிருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அவரது மகன் மற்றும் மகளுக்கும் வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா உறுதி செய்யப்பட்ட அசாத் மற்றும் அவரது குடும்பத்தினரும் வீட்டில் தங்களைத் தாங்களாகவே தனிமைப்படுத்தி கொண்டனர்.

இதற்கிடையே, வைரஸ் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் நாடாளுமன்ற கீழவை சபாநாயகர் அசாத் கடந்த 24-ம் தேதி அந்நாட்டு பிரதமர் இம்ரான்கானை சந்தித்துள்ளார்.

இதனால் இம்ரான்கானுக்கும் கொரோனா பரவியிருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.