லாகூர்:
பாகிஸ்தான் குடிமகன் ஒருவர் தனது பாஸ்போர்ட்டை கால நீட்டிப்பு செய்ய அங்கு விண்ணப்பித்திருந்தார்.

கடந்த ஜனவரி மாதம் இவர் விண்ணப்பம் செய்தார். இந்த பாஸ்போர்ட் ஒரு மாதம் காலத்துக்க்கு நீட்டிப்பு செய்து பாகிஸ்தான் நாட்டில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகம் வழங்கியது.
பாஸ்போர்ட்டை வாங்கி பார்த்த அந்த மனிதர் அதிர்ச்சியடைந்துவிட்டார். அந்த பாஸ்போர்ட் 2017ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி முதல் பிப்ரவரி 31ம் தேதி வரை நீட்டித்து அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பிப்ரவரி மாதத்தில் 28 தேதிகள் தான் இருக்கும் என்பதை மறந்துவிட்டு அந்த அலுவலர்கள் இப்படி குறிப்பிட்டிருந்தது தற்போது சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது.
Patrikai.com official YouTube Channel