இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் வரும் 18ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அந்நாடு அறிவித்து உள்ளது.
பாகிஸ்தானில் கொரோனா தொற்றின் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட கல்வி நிறுவனங்கள் செப்டம்பர் மாதம் திறக்கப்பட்டன. கொரோனா 2ம் அலை தாக்கத்தால் மீண்டும் நவம்பர் 26ம் தேதி பள்ளிகள் மூடப்பட்டன.
இந நிலையில் ஜனவரி 18ம் தேதி முதல் படிப்படியாக பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் கல்வி அமைச்சர் ஷப்கத் மஹ்மூத் கூறி உள்ளதாவது:
பாகிஸ்தானில் முதல் கட்டமாக 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜனவரி 18ம் தேதியும், 2ம் கட்டமாக ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஜனவரி 25ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும். பிப்ரவரி 1ம் தேதி முதல் கல்லூரிகள்,பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் என்று கூறினார்.