டெக்ஸாஸ்

டெக்சாஸில் ஒரு தேவாலயத்தில் நேற்று (ஜனவரி 3ந்தேதி) அடையாளம் தெரியாத நபர் சுட்டதில் ஒருவர் உயிரிழந்ததுடன்  பலர் காயம் அடைந்தனர்.

அமெரிக்க நாட்டில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகின்றன.   அமெரிக்காவில் தேவாலயங்கள், கேளிக்கை விடுதிகள். வணிக வளாகங்கள் உள்ளிட்ட  பல இடங்களில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.  கடந்த 2017 ஆம் ஆண்டு டெக்சாஸில் உள்ள ஒரு தேவாலயத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 20க்கும் அதிகமானோர் மரணம் அடைந்தனர்.

அமெரிக்காவில் துப்பாக்கிகள் வைத்திருக்க கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. ஆயினும் துப்பாக்கிச் சூடு நிகழ்வுகள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன.   அவ்வகையில் நேற்று டெக்ஸாஸ் மாநிலத்தில் உள்ள ஒரு தேவாலயத்தில் நேற்று துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.  இது முன்பு துப்பாக்கி சூடு நடந்த தேவாலயம் இது இல்லை.

நேற்று தேவாலயத்தில் பிரார்த்தனை நடந்த போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கூட்டத்தில் புகுந்து அங்குள்ள மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நிகழ்த்தி உள்ளார்.   இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்து பலர் காயம் அடைந்துள்ளனர்.  காவல்துறையினர் அங்கு விரைந்து வந்து துப்பாக்கிச் சூடு நடத்திய நபரைச் சுட்டுக் கொன்றுள்ளனர்.  காயமடைந்தோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.