லாகூர்:
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டு விசாவை பாகிஸ்தான் அரசு வழங்கியுள்ளது.

பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பு தற்போது லண்டனில் வசித்து வருகிறார்.

தற்போது பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசு கவிழந்தது. புதிய அரசு ஏற்பட்டுள்ளது. பிரதமராக நவாஸ் ஷெ ரீப் சகோதாரர் ஷெபாஸ் ஷெரீப் உள்ளார். இதையடுத்து நவாஸ் நாடு திரும்ப திட்டமிட்டுள்ளதையடுத்து, விசா கோரி விண்ணப்பித்தார். அவருக்கு 10 ஆண்டுகளுக்கு பாகிஸ்தானில் தங்க விசா வழங்கி பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார்.