இஸ்லாமாபாத்
குருநானக் 550 ஆம் பிறந்த நாளை முன்னிட்டு பாகிஸ்தான் அரசு புதிய நாணயம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
சீக்கியர்களின் முதல் குருவான குரு நானக் கடந்த 1469 ஆம் ஆண்டு பிறந்தார். அவருடைய 550 ஆம் பிறந்த நாள் வரும் நவம்பர் 9 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. குருநானக் நினைவிடம் பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூரில் அமைந்திருக்கும் குருத்வாரா தர்பார் சாகிப்பில் உள்ளது.
இதையொட்டி இந்தியாவில் இருந்து கர்தார்பூர் செல்ல வழித்தடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. வரும் 9 ஆம் தேதி அதாவது குருநானக் பிறந்த நாள் அன்று இந்த வழித்தடம் திறக்கப்பட உள்ளது. இந்த வழித்தடத்தைப் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் திறந்து வைக்கிறார்.
நேற்று பாகிஸ்தான் அரசு குருநானக் 550 ஆம் பிறந்த நாளை முன்னிட்டு புதிய நாணயம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த நாணயத்தின் புகைப்படத்தைப் பிரதமர் இம்ரான்கான் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
கர்தார்பூரில் வரும் 9 ஆம் தேதி வழித்தடம் திறக்கப்படும் முன்பு இந்த நாணயம் வெளியானது குறிப்பிடத்தக்கதாகும்.