இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். இந்த தகவலை பிரதமரின் சிறப்பு உதவியாளர் பைசல் சுல்தான் தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இம்ரான் கான் அண்மையில் தான் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தி கொண்டார். பாகிஸ்தானில் சில தினங்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக கட்டுப்பாடுகள் கடுமையாக அதிகரிக்கப்பட்டு உள்ளன.
Patrikai.com official YouTube Channel