டோக்கியோ:
ப்பானின் வடகிழக்கு கடலோர பகுதிகளை உலுக்கி எடுத்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கம், சுனாமி, எரிமலை வெடிப்பு போன்ற இயற்கை பேரிடர்களால் ஜப்பான் அடிக்கடி பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று ஜப்பானின் வடகிழக்கு கடலோர பகுதியில் 7.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஜப்பானின் கிழக்கு கடலோர பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தலைநகர் டோக்யோவில் நிலநடுக்கம் மிக பலமாக உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்கள் குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. ஜப்பான் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல்படி, இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளிக்கு அருகேதான் 2011ஆம் ஆண்டு ஏற்பட்ட மிக சக்திவாய்ந்த நிலநடுக்கமும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. 2011ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 18,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.