ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் பிப்ரவரி 7ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இந்தியா – இலங்கை ஆகிய இருநாடுகளில் நடைபெற்றுவரும் இந்த போட்டியின் லீக் மற்றும் சூப்பர் 8 சுற்றுகள் முடிந்து நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

இதில் சூப்பர் 8 சுற்றுடன் பாகிஸ்தான் அணி வெளியேறியதை அடுத்து அந்நாட்டு வீரர்கள் மீது அபராதம் விதிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தீர்மானித்துள்ளது.

ஏற்கனவே லீக் சுற்றில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 61 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்ததால் கடும் கோபத்தில் உள்ள வாரிய நிர்வாகிகள் சல்மான் அகா தலைமையிலான வீரர்கள் ஒவ்வொருவருக்கு பாகிஸ்தான் ரூபாயில் சுமார் 50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கவுள்ளது.

வெற்றிபெற்றால் பரிசுத் தொகை வழங்கப்படுவது போல் தோல்வி அடைந்தால் அபராதம் விதிக்கவும் வாரியத்துக்கு உரிமையுண்டு என்று வரிந்து கட்டியுள்ளது.

[youtube-feed feed=1]