லண்டன்: மூன்றாவது டெஸ்ட் முதல் இன்னிங்ஸில், குறைந்த ரன்களுக்கே பாகிஸ்தானின் 5 விக்கெட்டுகள் சரிந்த நிலையில், ஆஸர் அலி மற்றும் முகமது ரிஸ்வான் பெரிய கூட்டணி அமைக்க போராடிக் கொண்டுள்ளனர்.
ஆஸர் அலி சதத்தை நெருங்கியும், முகமது ரிஸ்வான் அரைசதம் அடித்தும் ஆடி வருகிறார்கள். ஃபவாட் ஆலம் அடித்த 21 ரன்கள் தவிர, ஆட்டமிழந்த பிற நான்கு பேட்ஸ்மென்களும் ஒற்றை இலக்க ரன்களே எடுத்தனர்.
எனவே, பாலோ ஆன் தவிர்க்க வேண்டுமெனில், ஏதேனும் ஒரு இணை பெரிய கூட்டணி அமைக்க வேண்டுமென்ற நிலை. எனவே, ஆஸர் அலி – முகமது ரிஸ்வான் இணை, பொறுப்பை உணர்ந்து ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் என்ற நிலையை நோக்கி நகர்ந்து வருகிறார்கள்.
தற்போதைய நிலையில், பாகிஸ்தான் அணி 500 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. இங்கிலாந்தைவிட 383 ரன்கள் பின்தங்கியுள்ளது.
இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் இதுவரை 4 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.