இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலுக்கு முஸ்லிம் லீக் கட்சியின் பிரதமர் வேட்பாளராக நவாஸ் ஷெரீப் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ்ஷெரீப் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக அந்நாட்டு உச்சநீதிமன்ற உத்தரவின்படி பதவி விலகினார். இதை தொடர்ந்து சாகித் கான் அப்பாஸி பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது.

நவாஸ் ஷெரீப் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பதால் அவர் மீண்டும் அந்த பதவிக்கு முன்நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு பதிலாக தனது சகோதரர் ஷெபாஸ் ஷெரீப்பை பிரதமர் வேட்பாளர் பதவிக்கு முன் நிறுத்த முடிவு செய்துள்ளார். இது குறித்து ஆலோசனை மேற்கொள்ள அவரது வீட்டில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மட்டும் கலந்து கொண்ட கூட்டம் நடந்தது.

இந்த கூடத்திற்கு பின் இந்த அறிவிப்பை நவாஸ் வெளியிட்டார். பஞ்சாப் மாநில முதல்வராக உள்ள ஷெபாஸ் ஷெரீப் அவர் 2018ம் ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக முன்நிறுத்தப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]