இந்தியாவிற்குள் தவறுதலாக நுழைந்து விட்ட பாகிஸ்தான் பெண்ணை ரமலான் பரிசு பொருட்களுடன் திருப்பி அனுப்பினர் இந்திய எல்லை பாதுகாப்பு படையினர்.
அதே போல, இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு சிறு வயதில் தவறுதலாக சென்று விட்ட வாய் பேச முடியாத கீதாவை வளர்த்து அண்மையில் இந்தியாவில் பெற்றோர்களுடன் ஒப்படைத்தனர் பாகிஸ்தான் தம்பதியினர்.

இரண்டுமே நெகிழ்ச்சியான மகிழ்ச்சிதான். அதே நேரம், சாட்டிலைட் விட்டு அணுகுண்டு வெடிக்கும் அளவுக்கு முன்னேரிய பிறகு, எல்லையை மக்கள் உணரும்படியான ஒரு ஏற்பாட்டைச் செய்ய முடியாதது சோகம்தான்.
ஏனென்றால் இவர்களைப்போலே அறியாமல் எல்லை கடந்து சென்றவர்கள், அல்லது எல்லை கடந்து வந்தவர்கள் பலர் கடுமையான விசாரணையை எதிர்கொண்டு சிறையில் தள்ளப்பட்டிருக்கிறார்கள். தற்போதும் சிறையில் வாடுகிறார்கள்.
Patrikai.com official YouTube Channel