லாகூர்
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநில அமைச்சர் ஃபய்யஸ் சோகன் ராஜினாமாவை முதல்வர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் தகவல்துறை அமைச்சராக ஃபய்யஸ் சோகன் பதவி வகித்து வந்தார். . இவர் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம்தேதி அன்று நடந்த கூட்டம் ஒன்றில் இந்துக்களுக்கு எதிராக பேசி உள்ளார். அது சமூக வலை தளங்களில் வைரலாகியது. அமைச்சரின் பேச்சுக்கு நாடெங்கும் எதிர்ப்பு கிளம்பியது. சமூக வலை தளங்களில் ஃபய்யஸ் சவுகானை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்னும் ஹேஷ் டாக் டிரண்டாகியது.
இதை ஒட்டி அமைச்சர் மன்னிப்பு கோரினார். தனது மன்னிப்பில் அவர், “நான் எனது பேச்சில் இந்திய பிரதமர் மோடி, இந்திய ராணுவம் மற்றும் இந்திய ஊடகங்களை தாக்கி பேசினேன். பாகிஸ்தானில் உள்ள இந்து சமுதாய மகக்ளை பேசவில்லை. எனது கருத்துக்கள் பாகிஸ்தான் வாழ் இந்து மக்களின் மனதை புண்படுத்தி இருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் ஒரு போதும் பாகிஸ்தான் வாழ் இந்து சமுதாய மக்களை தவறாக எண்ணியதில்லை” என கேட்டுக் இஒண்டுள்ளார்.
ஆயினும் பாகிஸ்தான் மக்கள் தொடர்ந்து அவருக்கு எதிராக கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிந்து வந்தனர். அத்துடன் அவருடைய கட்சியின் மூத்த தலைவர்களும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதனால் அமைச்சர் சோகன் பஞ்சாப் முதல்வர் உஸ்மான் புஸ்தார் இல்லத்துக்கு சென்று தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். முதல்வர் அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்டுள்ளார்.