ஸ்லாமாபாத்

பாகிஸ்தான் அரசு அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.

சமீபத்தில் பாகிஸ்தானால் சிறை பிடிக்கப்பட்ட இந்திய விமானப்படை விமானி அபிநந்தனை விடுவிக்க உலக நாடுகள் அழுத்தம் அளித்தன.   அதை ஒட்டி பாகிஸ்தான் அமைச்சரவை அவரை விடுதலை செய்ய ஒப்புதல் அளித்தது.    இம்ரான் கான் அந்த அறிவிப்பை வெளியிட்டார்.   இந்த அறிவிப்புக்காக அவரை பலர் புகழ்ந்து வருகின்றனர்.

பாகிஸ்தான் அரசு தங்கள் நாட்டின் பிரதமர் இம்ரான் கான் இந்திய விமானி அபிநந்தன் விடுதலைக்கு ஒப்புதல் அளித்ததை வெகுவாக பாராட்டி உள்ளது.   அத்துடன் இதற்காக அவருக்கு இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.

அதே நேரத்தில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.   பாகிஸ்தான் நடத்தி வரும் பயங்கரவாதத்தை நிறுத்த இம்ரான் கான் தனது உதட்டைக் கூட அசைக்க வில்லை என அவர் கூறி உள்ளார்.