இஸ்லாமாபாத்,

லைதளங்கள் அவ்வப்போது ஹேக்கர்கள் எனப்படும் சமூக விரோதிகளால் முடக்கப்படுவது நடைபெற்று வருகிறது.

சில மாதங்களுக்கு முன்பு இந்திய அரசின் வெப்சைட்டுகளும் பாகிஸ்தான் ஹேக்கர்களால் முடக்கப்பட்டு, பின்னர் மீட்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது பாகிஸ்தான் அரசு வெப்சைட்டை ஹேக் செய்து, அதில்  இந்திய தேசிய கீதத்தை ஒலிக்கவிட்டுள்ளனர் ஹேக்கர்கள்

பாகிஸ்தான் அரசுக்கு சொந்தமான இணையதளத்தினை முடக்கி இந்தியாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர் ஹேக்கர்கள். இந்த செயலை செய்தது யார் என்று பாகிஸ்தான் சைபர் துறை புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாகிஸ்தானில் தற்போது, நவாஸ் ஷெரிப் பதவி விலகி, புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல் சூழ்நிலையில்,  பாகிஸ்தான் அரசுக்கு சொந்தமான இணையதளத்தினை ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர்.

மேலும், முடக்கப்பட்ட அந்த வளைதளத்தில், பாகிஸ்தானுக்கு கோபத்தை வரவழைக்கும் வகையில், இந்திய தேசிய கீதத்தினையும் பதிவேற்றம் செய்து, இந்திய சுதந்திர தினத்துக்கு வாழ்த்துக்கள் என்றும் அதில் பதிவு செய்துள்ளனர்.

‘பாகிஸ்தான் ஹக்ஸ்சர்ஸ் க்ரூ’ என்று தங்களுக்கு தாங்களே பெயரிட்டுள்ள அவர்கள், அடுத்து என்ன செய்வார்களோ என்று பாகிஸ்தான் முழுவதும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், இதை போன்றே கடந்த 4 மாதங்களுக்கு முன் இந்தியாவில் உள்ள ஐஐடி நிறுவனங்களை பாகிஸ்தான் ஆதரவு ஹேக்கர்கள் முடக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.