பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் துணை ராணுவ படையினரால் இஸ்லாமாபாத் நீதிமன்றம் அருகே கைது செய்யப்பட்டார்.
நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியடைந்து பிரதமர் பதவியை இழந்த இம்ரான் கான் மீது ஏராளாமான வழக்குகள் தொடரப்பட்டது.
இந்நிலையில் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த இம்ரான் கானை தடுத்து நிறுத்தி அந்நாட்டு துணை ராணுவப் படையினர் கைது செய்துள்ளனர்.
இதனை அடுத்து இஸ்லாமாபாத் நீதிமன்ற தலைமை நீதிபதி அந்நாட்டு உள்துறை அமைச்சக செயலாளர் உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியுள்ளார்.
இம்ரான் கான் கைதை தொடர்ந்து நாடு முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அவரது ஆதரவாளர்கள் லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.