இஸ்லாமாபாத்
ராணுவ தளபதி குவாமிர் ஜாவித் பாஜ்வா வின் பதவிக்காலத்தை மூன்று ஆண்டு நீட்டித்து பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.
விதி எண் 370 விலக்கப்பட்டு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு விலக்கிக் கொண்டது. அத்துடன் ஜம்மு மற்றும் காஷ்மீர் என அம்மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டன. லடாக் பகுதி மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இதற்குப் பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த விவகாரத்தை அந்நாடு ஐநா பாதுகாப்பு கவுன்சில் வரை எடுத்துச் சென்றது. ஆனால் ஐநா பாதுகாப்புச் சபை பாகிஸ்தான் கோரிக்கையை நிராகரித்தது, இந்நிலையில் பல பாஜக தலைவர்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் இந்தியாவுடையது எனப் பேசி வருகின்றனர்.
இதனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடும் பதட்டம் நிலவி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவ தளபதி குவாமிர் ஜாவித் பாஜ்வா வின் பதவிக் காலத்தை மூன்றாண்டுகளுக்கு நீட்டித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போதைய சூழலில் பாகிஸ்தானின் இந்த நடவடிக்கை முக்கியத்துவம் உள்ளதாகக் கருதப்படுகிறது.