இஸ்லாமாபாத்

பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் இம்ரான்கான் உதவியாளர் முகமது குரேஷி தேர்தலில் போட்டியிட 5 ஆண்டுகள் தடை விதித்துள்ளது.  

வரும் 8 ஆம் தேதி பாகிஸ்தான் நாட்டில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.  இந்த தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் ஆட்சிக்கு வர முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மற்றும் அவரைச் சேர்ந்தவர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் நெருங்கிய உதவியாளரான முகமது குரேஷி வெளியுறவு அமைச்சரக இருந்தபோது அரசு ரகசியங்களைக் கசிய விட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டது.

இந்த வழக்கில் கடந்த 30 ஆம் தேதி இம்ரான்கான் மற்றும் முகமது குரேஷி ஆகிய இருவருக்கும் தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

எனவே அடுத்த 5 ஆண்டுகளுக்கு முகமது குரேஷி தேர்தலில் நிற்கத் தடை விதித்து பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  தேர்தல் நெருங்கி வரும் வேளையில் இந்த உத்தரவு வெளியானது பரபரப்பாகி உள்ளது.