இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,21,896 ஆக உயர்ந்துள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானில் தற்போது வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையில் பாகிஸ்தான் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் பாகிஸ்தானில் மேலும் 4,087 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அந்நாட்டில் ஒட்டு மொத்தமாக கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2,21,896 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் ஒரே நாளில் 78 பேர் உயிரிழக்க மொத்த எண்ணிக்கை 4,551 ஆக இருக்கிறது. வைரஸ் தொற்றில் 1,13,623 பேர் குணமாகி விட்டனர். பாகிஸ்தானில் அதிகபட்சமாக சிந்து மாகாணத்தில் 89,225 பேருக்கும், பஞ்சாப் மாகாணத்தில் 78,956 பேருக்கும் கொரோனா உறுதியாகி இருக்கிறது.
கடந்த 24 மணிநேரத்தில் 22,941 பேருக்கும், ஒட்டுமொத்தமாக 13,50,773 பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உலக நாடுகளின் வரிசையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் பாகிஸ்தான் 12வது இடத்தில் இருக்கிறது.
Patrikai.com official YouTube Channel