பிரேசிலியா: பிரேசிலில் கொரோனா தொற்று எண்ணிக்கை 15 லட்சத்தை கடந்து அதிர்ச்சி தருகிறது.
உலக நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிக கொரோனா தொற்று உள்ள நாடு பிரேசில். அந்நாட்டில் 24 மணி நேரத்தில் 48,105 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்த தகவலை அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒட்டு மொத்தமாக வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  15,02,424 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பரவல் துவங்கியதில் இருந்து 2வது அதிகபட்ச தினசரி தொற்று எண்ணிக்கை இது தான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 19 ம் தேதி அதிகபட்சமாக 54,771 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.  ஒரே நாளில் 1,252 பேர் பலியாக, உயிரிழப்பு 62,045 ஆக உயர்ந்துள்ளது. 9,16,147 பேர் குணமடைய 5,24,232 பேர் மருத்துவமனையில் உள்ளனர்.