டில்லி

ந்திய எல்லை ஓரமாகப் பாகிஸ்தான் தொலைத் தொடர்பு  கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார்.

இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் முகாமிட்டு வருவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.   தற்போது காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து விலக்கிக் கொள்ளப்பட்டதை அடுத்து மாநிலம் எங்கும் பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது

தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் காஷ்மீர் நிலை குறித்து நேரில் ஆய்வு செய்துள்ளார்.    எல்லைப்பகுதியில் சுமார் 20 கிமீ தூரத்துக்குப் பாகிஸ்தான் நாட்டுத் தொலை தொடர்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அஜித் தோவல்  தெரிவித்துள்ளார்.

அத்துடன் அவர்கள் இந்த கோபுரங்கள் மூலம் பல தகவல்கள் பகிர்ந்து கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  பாகிஸ்தான் ராணுவத்தினர் தங்க:ள் ஆட்களுக்கு அனுப்பி உள்ள செய்தியில், “இங்கு ஏராளமான ஆப்பிள் லாரிகள் நடமாடிக்கொண்டு உள்ளன.

 

அந்த லாரிகளை நீங்கள் ஏன் நிறுத்தவில்லை?   உங்களால் இந்த லாரிகள் நடமாட்டத்தை நிறுத்த முடியாத ஒரு நிலையில் உள்ளீர்கள்.   ஆண்களாகிய உங்களுக்குப் பெண்கள் அணியும் வளையல்களை நாங்கள் அனுப்பவா? என கேட்டுள்ளதாக அஜித் தோவல் தெரிவித்துள்ளார்.