இஸ்லாமாபாத்: தனது நாட்டின் 19 மரங்களை குண்டுவீசி அழித்த காரணத்திற்காக, அடையாளம் தெரியாத இந்திய விமானப்படை பைலட்டுகள் மீது, பாகிஸ்தானில், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில், பாகிஸ்தானின் பலாகோட்டிலுள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தி, அதன்மூலம் நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று கூறப்படும் நிலையில், பாகிஸ்தானின் இந்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக மேலும் கூறப்படுவதாவது: “பாகிஸ்தானின் காப்புக் காட்டிலுள்ள 19 பைன் மரங்களை அழித்ததற்காக, அடையாளம் தெரியாத இந்திய விமானப்படை பைலட்டுகளின் மீது, வனத்துறை சார்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இதன்விளைவாக, இந்தியாவின் மீது, சூழலியல் தீவிரவாதம் தொடர்பாக, ஐக்கிய நாடுகள் சபையில் புகார் தருவதற்கும் பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் இந்த நடவடிக்கையானது ‘சூழலியல் தீவிரவாதம்’ என்று பாகிஸ்தான் குற்றம் சாட்டுவதாயும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

– மதுரை மாயாண்டி