மும்பை:

2025-க்குப் பிறகு மீண்டும் இந்தியாவின் ஒரு பகுதியாக பாகிஸ்தான் மாறும் என ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் இந்திரேஸ் குமார் தெரிவித்துள்ளார்.


மும்பையில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய இந்திரேஸ் குமார், “நான் சொல்வதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இன்று 7 ஆண்டுகளில் நாம் கராச்சி, லாகூர், ராவல்பிண்டி, சியால்கோட்டில் கடைகளை வாங்குவோம். வர்த்தகம் செய்வோம்.

1947-க்கு முன்பு பாகிஸ்தான் கிடையாது.2025-க்குப் பிறகு பாகிஸ்தான் இந்தியாவாகிவிடும். மீண்டும் நம் நாட்டின் ஒரு அங்கமாகிவிடும்.

நஸ்ருதீனாக இருந்தாலும், ஹமீத் அன்சாரியாக இருந்தாலும், சித்துவாக இருந்தாலும், தேசத் துரோகிகளை கையாள புதிய சட்டம் தேவை.

நம் படைகள் மீது நம்பிக்கை இன்றி ஆதாரம் கேட்கிறார்கள். மோடியை பகைத்துக் கொண்டு பாகிஸ்தான் வாழ்க என கோஷம் போடுகிறார்கள்.
ஒரு தேசம், ஒரு பிரஜை, ஒரு கொடி என்பதே ஆர்எஸ்எஸ் கொள்கை.

எந்த மாநிலத்துக்கும் தனி அந்தஸ்து தரக்கூடாது.
காஷ்மீர் மக்கள் நாட்டின் எப்பகுதிக்கும் சென்று சொத்து வாங்கலாம். ஆனால், பிற பகுதியினர் ஏன் காஷ்மீரில் சென்று சொத்து வாங்கக் கூடாது. இதுதான் அடிப்படைவாதம், ஜனநாயக படுகொலை மற்றும் அநீதி “என்றார்.