பலோசிஸ்தான்:
பலோசிஸ்தானில் பயங்கரவாதிகளுடன் மோதிய பாகிஸ்தான் ராணுவ வீரர் உயிரிழந்தார்.

பலோசிஸ்தான் மாகாணத்தில் பயங்கரவாதிகளுடனான மோதலில் ஒரு சிப்பாய் கொல்லப்பட்டதை பாகிஸ்தான் ராணுவம் இன்று உறுதிப்படுத்தியுள்ளது.
அவாரன் அருகிலுள்ள ஜாட் பஜாரில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பது தொடர்பான உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையில் பாதுகாப்பு படையினர் ஞாயிற்றுக்கிழமை தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதாக ஒரு ராணுவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேடுதல் நடவடிக்கையின் போது பயங்கரவாதிகளுடன் ஏற்பட்ட மோதலில், ஒரு சிப்பாய் காயமடைந்து உடனடியாக கராச்சிக்கு அனுப்பப்பட்டதாக இராணுவ ஊடகப் பிரிவு அறிக்கையான இன்டர் சர்வீஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் தெரிவித்துள்ளது.
காயமடைந்த சிப்பாய்க்கு விரைவில் முதலுதவி செய்தும், அதிகப்படியான ரத்தப் போக்கு காரணமாக அவர் உயிரிழந்தார் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel