வாய்

ண்மையில் ஹவாய் தீவில் எரிமலை வெடித்துச் சிதறியதால் ஒரு குளமே நீராவியாக ஆகி உள்ளது.

அமெரிக்காவின் ஹவாய் தீவில் கிலாவியா என்னும் எரிமலை அமைந்துள்ளது.   இந்த எரிமலை அண்மையில் வெடித்துச் சிதறி உள்ளது.  இதனால் எரிமலையில் இருந்து வெளிவரும் லாவா சிதறல்கள் சுமார் 165 அடி உயரத்துக்குத் தூக்கி வீசப்பட்டுள்ளது.

இதையடுத்து அங்கு 4.4 ரிக்டர் அளவில் நில அதிர்வு உண்டாகியது.

கிலாகியா எரிமலையின் அடிவாரத்தில் ஒரு குளம் உள்ளது.   எரிமலையில் இருந்து வெடித்துச் சிதறிய லாவா ஒரு குளத்தில் சென்று சேர்ந்துள்ளது.   இந்த வெப்பத்தால் குளத்தின் நீர் முழுவதும் நீராவி ஆகி உள்ளது.

தற்போது இந்த நீராவி சுமார் 9 கிமீ சுற்றளவுக்குக் காற்றில் வேகமாகப் பரவி உள்ளது.  இது முழுவதுமாக குளிர்ந்த பிறகு இந்த சுற்றுப்பகுதியில் கன மழை பெய்யும் என எதிர்பார்ப்பு உள்ளது.

[youtube https://www.youtube.com/watch?v=d96JyuFE8so]