மதத்தை அவமதித்த வழக்கில் சிறுவனுக்கு ஜாமீன் எதிரொலி – பாகிஸ்தானில் இந்து கோவில் மீது தாக்குதல்

Must read

இஸ்லாமாபாத்: 
பாகிஸ்தானில் உள்ள இந்து கோவில் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில்,  பாகிஸ்தானின் ரஹீம் யார்கான் மாவட்டத்தில் இருக்கும் இந்து கோவிலை அடித்து நொறுக்கிய சிலர் அந்த பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர்,  இந்த தாக்குதலுக்குக் காரணமாக மதராசா நூலகத்தில் மத புத்தங்களை வைத்திருந்த கம்பளத்தின் மீது வேண்டுமென்றே ஒரு சிறுவன் சிறுநீர் கழித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்றும்,  இந்து கோவில் மீது தாக்குதல் நடத்தியதற்கு இந்த வாரத் தொடக்கத்தில் சிறுவன் ஒருவர் மதப்பள்ளியை அவமதிக்கும் செயலில் ஈடுபட்டதே காரணம் எனக் கூறப்படுகிறது என்று தெரிவித்தார்.
இந்து கோவில் மீது தாக்குதல் நடத்தப்படுவது குறித்து தகவல் கிடைத்ததும் நிலைமையைக் கட்டிற்குள் கொண்டுவர அங்கு காவல்துறையினர் அனுப்பி வைக்கப்பட்டனர் என்று தெரிவித்த அவர்,  காவல்துறை அங்கு வருவதற்குள் இந்து கோவிலைச் சிலர் அடித்து நொறுக்கி விட்டனர். இதையடுத்து 8 வயது சிறுவனை காவல்துறை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அந்த சிறுவனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதால் ஆத்திரமடைந்த சிலர் இந்து கோவில் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர்.
பாகிஸ்தான் இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் செயலில் ஈடுபட்டால் அவர்களுக்கு மரண தண்டனை வழங்குவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article