பாக்., எங்களை ஊக்குவிக்கிறது: தீவிரவாதிகளின் தலைவர் ஒப்புதல்!

Must read

இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் ராணுவம் எங்களுக்கு பயற்சி தந்து ஊக்குவிக்கிறது, நாங்கள் பாகிஸ்தானின் எப்பகுதிக்கும் சுதந்திரமாக சென்றுவரமுடியும் என்று பாகிஸ்யானின் தீவிரவாத குழுக்களின் தலைவர் சலாலுதீன் உள்நாட்டு பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

சையது சலாலுதீன்
சையது சலாலுதீன்

ஹிஸ்புல் முஜாகிதீன் என்ற அமைப்பின் தலைவர் சையத் சலாலுதீன் யுனைடெட் ஜிகாத் கவுன்சில் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இந்த அமைப்பின் கீழ் 16 தீவிரவாத குழுக்கள் இயங்கி வருகின்றன. இவை அனைத்தும் காஷ்மீரில் தீவிரவாத செயல்கள் புரிந்து வருபவையாகும்.
இவரும் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தலைவர் ஜாகி உர் ரஹ்மான் லக்வியும் இணைந்து தொழுகை செய்யும் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி இருந்தன. காஷ்மீரை விடுவிக்க ஜிகாத் ஒன்றே வழி என்பது இவர்கள் கொள்கையாகும். இவர்களை பாகிஸ்தான் ஊக்குவிப்பது இவர்கள் வாயாலேயே இப்போது அம்பலமாகியுள்ளது.

More articles

Latest article