ர்தர்பூர்

ல்லைபகுதியில் உள்ள கர்தர்பூர் குருத்வாராவில் அமைக்கப்பட்டுள்ள ஆன்மிக பாதையில் பாகிஸ்தான் எல்லையில் உள்ள பணிகள் 80% முடிவடைந்துள்ளது.

பாகிஸ்தானில் அமைந்துள்ள கர்தர்பூர் குருத்வாரா இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் எல்லையில் உள்ளது. சீக்கியர்களின் முதன்மை குருவான குருநானக் இங்கு தனது வாழ்க்கையின் கடைசி 18 வருடங்களை  கழித்தார். குருநானக் சமாதி இங்கு அமைந்துள்ளது. அதனால் இந்த குருத்வாரா சீக்கியர்களுக்கு மிகவும் முக்கியமான தலமாகும்.

கடந்த 2018 ஆம் வருடம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் இந்த குருத்வார வின் உள்ளே ஒரு ஆன்மீக பாதை அமைக்க ஒப்புக் கொண்டு பணி துவக்கப்பட்டது. இந்த பணியில் இந்திய எல்லைக்குள்ளான பணிகளை இந்தியா தொடங்கியது. பாகிஸ்தான் எல்லையில் உள்ள பகுதியை அமைக்கும் பணிகளை அந்நாடு துவங்கியது.

நேற்று முன் தினம் இந்த பணியின் பாக் பொறியாளர் காசிஃப் அலி, “கர்தர்பூர் குருத்வாராவின் பாதை அமைப்பில் அமைந்துள்ள பிரதான சாலை, பாலம் மற்றும் கட்டுமானங்களில் 80% பணியை பாகிஸ்தான் முடித்துள்ளது. இன்னும் சிமிண்டு டைல்ஸ் பொருத்தும் வேலை பாக்கி உள்ளது.

அதற்கான பணி உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரத்தில் தொடங்கப்பட உள்ளது   இந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள வெள்ளை பளிங்கு கிடைப்பது மிகவும் கடினமாக இருந்தது. இந்த பணியில் அதிக அளவு வெள்ளை பளிங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பகுதியில் அமையப்பெறும் சாப்பிடும் அறை, தரிசன அறை, நிர்வாக கட்டிடம், கழிவறைகள் போன்றவைகளிலும் 80%க்கும் மேல் பணிகளை முடித்துள்ளோம். மின்சாரம் மற்றும் எரிவாயு இணைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் உள்ள அலங்கார வளைவு புதுமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது ” என தெரிவித்துள்ளார்