ஸ்லாமாபாத்

மெரிக்க அரசு நிதி உதவியை நிறுத்தியதை ஒட்டி ஜமாத் உத் தவா இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பாகிஸ்தான் தங்களிடம் நிதி உதவி பெற்றுக் கொண்டு அதை பயங்கரவாத இயக்கங்களுக்கு வழங்குகிறது என குற்றம் சாட்டினார்.   அதையொட்டி அமெரிக்க அரசு பாகிஸ்தான் நாட்டுக்கு வழங்கிய நிதி உதவிகள் அனைதையும் நிறுத்தி உள்ளது.    இதனால் பாகிஸ்தான் அரசுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க அரசை சமாதானப் படுத்த பாகிஸ்தான் அரசு ஹபீஸ் சயீத்தின் இயக்கமும்,  லஷ்கர் ஈ தொய்பாவின் தாய் அமைப்புமான ஜமாத் உத் தவா இயக்கம் பொது மக்களிடம் இருந்து நிதி உதவி பெறுவதை  தடை செய்தது   தற்போது இந்த இயக்கத்தை பயங்கரவாதமாக அறிவித்துள்ளது.    இந்த அறிவிப்பு நாடெங்கும் உள்ள அனைத்துப் பத்திரிகைகளிலும் உருது மொழியில்  விளம்பரமாக வெளியிடப்பட்டுள்ளது.