சென்னை:
வாக்குப்பதிவு தினமான ஏப்ரல் 18-ந்தேதி சம்பளத்துடன் விடுப்பு வழங்க வேண்டும் என்று அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும் தொழிலாளர் நலத்துறை ஆணையர் அதிரடி உத்தரவிட்டு உள்ளார்.
தமிழகத்தில் வரும் 18ந்தேதி நாடாளுமன்ற வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அத்துடன் 18 சட்ட மன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி இன்று மாலையுடன் அனல் பறந்த தேர்தல் பிரசாரம் ஒய்வு பெறுகிறது
இந்த நிலையில், தேர்தலில் மக்கள் பணிச்சுமையின்றி வாக்களிக்கும் வகையில் ஏப்ரல் 18-ம் தேதியை அரசு விடுமுறை நாளாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ஆனால், பெரும்பாலான தனியார் நிறுவனங்கள், தங்களது தொழிலாளர்களை வாக்களித்து விட்டு பணிக்கு வரும்படி அறிவுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தொழிலாளர் நல ஆணையர் நந்தகோபால் அதிரடி அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
அதில், தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 18ந்தேதி தனியார் நிறுவனங்கள் தங்களது நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஏப்ரல் 18ல் ஒருநாள் சம்பளத்துடன் விடுப்பு அளிக்க வேண்டும். தவறும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தொழிலாளர் நல ஆணையர் கூறியுள்ளார்.