சசிகுமார் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் பகைவனுக்கு அருள்வாய். அனிஸ் இயக்கத்தில் இப்படம் சமீபத்தில் தொடங்கப்பட்டது. 2014-ம் ஆண்டு வெளியான திருமணம் என்னும் நிக்காஹ் திரைப்படத்தை இயக்கியவர் அனிஸ்.

இந்த படத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்க வாணி போஜன், பிந்து மாதவி, நாசர், சதீஷ்,ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

முன்னதாக இதன் படப்பிடிப்பு தொடக்கம் மற்றும் தலைப்பு அறிவிக்கப்பட்டு, பரபரப்பாக பேசப்பட்டது. இப்போது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மற்றொரு சுவாரஸ்யத்தை அளித்திருக்கிறது.

சூர்யா, பிரித்வி ராஜ், ராம் கோபால் வர்மா போன்ற பிரபலங்கள் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டனர். ஃபர்ஸ்ட் லுக்கில் கருப்பு சட்டை, கருப்புபேண்ட், தாடி, நீண்ட முடி என ரெட்ரோ லுக்கில் செம ஸ்டைலாக உள்ளார் சசிகுமார்.

4 மங்கீஸ் ஸ்டுடியோ தயாரிக்கும் இந்த படத்திற்கு கார்த்திக் கே.தில்லை ஒளிப்பதிவு செய்ய ஜிப்ரான் இசையமைக்கிறார். காசி விஸ்வநாதன் படத்தொகுப்பு செய்கிறார்.