தற்போது இந்தியில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் திரைப்படம் பத்மாவத். ராணி பத்மினியின் கதை இது. இந்தப் படத்தில் அவரை தவறாக சித்தரித்திருக்கிறார்கள் என்று வட இந்தியாவில் சில அமைப்புகள்.. குறிப்பாக இந்துத்துவ அமைப்புகள் கலவரத்தில் இறங்கின.
“இந்தப்படம் பத்மாவதி கதையே அல்ல” என்கிறது படக்குழு. “இது முழுக்க முழுக்க கற்பனை கதையே” என்று படம் துவங்கும் முன் அறிவிக்கவும் செய்கிறார்கள்.
ஆனால், படம் வெளியான பிறகு, “இது பத்மாவதி கதைதான். ஆனால் படத்தில் பத்மினியை தவறாக சித்தரிக்கவில்லை. எதிர்ப்ப்பை கைவிடுகிறோம்” என்று அறிவித்துள்ளது இந்து மக்கள் கட்சி.
இது ஒருபுறம் இருக்க.. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே தமிழில் பத்மாவதி கதை வந்திருக்கிறது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
இதுபோன்ற கதையம்சதுடன் கூடிய சித்தூர் ராணி பத்மினி என்ற படத்தை உமா பிக்சர்ஸின் ஆர்.எம். ராமநாதன் தயாரிப்பில் சித்ரபு நாராயணமூர்த்தி இயக்கி உள்ளார் இந்த படத்துக்கு கதை, திரைக்கதையை ஸ்ரீதரும் இளங்கோவனும் எழுதினர்.
இந்த படத்தில் சிவாஜி கணேசன், வைஜெயந்திமாலா, எம்.என். நம்பியார், டி.எஸ். பாலையா, கே.ஏ. தங்கவேலு என நடிகர் கூட்டமே நடித்து 1963ம் ஆண்டு பிப்ரவரி 9ந்தேதி வெளியாகி உள்ளது.
இந்த படத்தில், தற்போதைய பத்மாவத் படம் போன்றே, ராணியை அடைய நாட்டையே அழிப்பதாக பல்வேறு சித்துவேலைகள் அலாவுதீன் கில்ஜி மிரட்ட, அதைத்தொடர்ந்து, ராணியின் பிம்பர் தண்ணீரில் எதிரொலிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும்.
அதை அலாவுதீன் கில்ஜி பார்த்துக்கொண்டிருக்கும் நேரத்தில், அலாவுதீனைக் கொல்லவும் ராணா திட்டமிடுவது போன்று காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.
இந்த படத்தில், ராணாவாக சிவாஜி கணேசனும் ராணி பத்மினியாக வைஜெயந்திமாலாவும் அலாவுதீன் கில்ஜியாக எம்.என். நம்பியாரும் நடித்திருந்தார்கள். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றிபெறவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அந்த காலத்தில் இந்த படத்தற்கு எந்தவிதமான எதிர்ப்புகளும் கிளம்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.